"6 மாவட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு என்ன செய்தது?" - அன்புமணி கேள்வி

35 வருடம் சம்பாதித்ததை ஒரே இரவில் மக்கள் இழந்துள்ளதாக பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-25 07:51 GMT
35 வருடம் சம்பாதித்ததை ஒரே இரவில் மக்கள் இழந்துள்ளதாக பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த பல்லாவரத்தில் தகவல் தொழில் நுட்ப நிறுவன மென் பொறியாளர்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயல் பாதிப்பு ஏற்பட்ட 8 நாட்களுக்கு பின்னரும், மாநில அரசு மெத்தனப் போக்காக செயல்படுவதாகவே குற்றம்சாட்டினார். மத்திய அரசு 150 கோடி ரூபாய் நிவாரண உதவி கொடுத்தால் அதிகம் என்றும், கடந்த கால அனுபவங்களில் இருந்து இதனை தெரிவிப்பதாகவும் கூறினார். தமிழகத்தில் 6 மாவட்டங்கள் பெரிய அளவில் பாதித்து இருந்தும் மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை என்றும் அன்புமணி குற்றம்சாட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்