புயல் கரையை கடக்கும் போது வெளியே செல்ல வேண்டாம் - நாராயணசாமி
புதுச்சேரியில் 'கஜா' புயலை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.;
செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அரக்கோணத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள தேசிய மீட்பு படையினர் தயார் நிலையில் இருப்பதாக கூறினார். புயல் கரையை கடக்கும் போது, வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் நாராயணசாமி அறிவுறுத்தியுள்ளார்.