பா.ஜ.கவில் பலமிழந்துவிட்டார் நரேந்திரமோடி - திருநாவுக்கரசர்

அடுத்த பிரதமர் வேட்பாளர் குறித்து பா.ஜ.க யோசனை செய்து வருவதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-14 10:18 GMT
பாஜகவிற்குள்ளேயே மோடி பலமிழந்துவிட்டதால், அடுத்த பிரதமர் வேட்பாளர் குறித்து அக்கட்சி யோசனை செய்துவருவதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். சென்னை கத்திப்பாராவில் உள்ள நேருவின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவ படத்திற்கு மரியாதை செய்த பிறகு பேசிய அவர், ஸ்டாலினுடன் பிற கட்சி தலைவர்களின் சந்திப்பு மெகா கூட்டணிக்கு பலம் சேர்க்கும் என கூறினார். 


Tags:    

மேலும் செய்திகள்