சபரிமலை விவகாரம் - கேரள அரசுக்கு அமித் ஷா கண்டனம்

ஐயப்ப பக்தர்களின் போராட்டத்தை கேரள மாநில அரசு ஒடுக்க நினைப்பதாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா குற்ற​ஞ்சாட்டியுள்ளார்.;

Update: 2018-10-28 03:53 GMT
உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதாக கூறிக்கொண்டு நடந்துவரும் அடக்குமுறைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூ​றியுள்ளார். மத நம்பிக்கையையும் பாராம்பரியத்தையும் அழிக்க பினராயி விஜயன் தலைமையிலான அரசு நினைப்பதாக குற்றம்சாட்டியுள்ள அமித் ஷா, இது தொடருமானால் ஆட்சியை இழக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மக்களின் நம்பிக்கைகளை பாதிக்காமல் நீதிமன்ற உத்தரவுகள் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்