பல்கலைக்கழக ஊழல்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் - ஆளுநருக்கு அன்புமணி கோரிக்கை

பல்கலைக்கழக ஊழல்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த தமிழக ஆளுனர் ஆணையிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

Update: 2018-10-06 22:37 GMT
பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வித்துறையில் நடைபெற்ற அனைத்து ஊழல்கள் குறித்தும் விரிவான விசாரணை நடத்த தமிழக ஆளுனர் ஆணையிட வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.  துணைவேந்தர்கள் முதல் உதவிப் பேராசிரியர் நியமனம்  வரை ஒவ்வொரு நிலையிலும் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தி தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டியது ஆளுனரின் கடமை என்றும் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்