என்னை திமுகவில் இணைத்தால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத் தயார் - அழகிரி

முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, என்னை திமுகவில் இணைத்தால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத் தயார் என தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-30 08:30 GMT
பொதுக்குழு மட்டும் தி.மு.க. அல்ல என்றும், கட்சியில் சேர்க்காவிட்டால், அமைதிப் பேரணிக்கு பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசித்து முடிவெடுப்போம் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார். தன்னை தி.மு.க.வில் சேர்த்தால், ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார் என்றும் அழகிரி தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்