திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்தார்

திமுக தலைவர் பதவிக்கு அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

Update: 2018-08-26 06:16 GMT
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி, காலமானார். இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான  தேர்தல், அண்ணா அறிவாலயத்தில், நாளை மறுதினம் நடக்க உள்ளது. இதையடுத்து, தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது. இதில், திமுக தலைவர்   பதவிக்கு, எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின், வேட்புமனுத் தாக்கல் செய்தார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் அவர், வேட்புமனு அளித்தார். தலைவர் பதவிக்கு ஸ்டாலினை, திமுகவில் உள்ள 65 மாவட்ட செயலாளர்களும் முன்மொழிந்தனர்.

கருணாநிதி சமாதியில் வேட்புமனுவை வைத்து ஆசி 



முன்னதாக, திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, ஸ்டாலின், வாழ்த்துப் பெற்றார். இதனைத் தொடர்ந்து, மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு சென்ற ஸ்டாலின், வேட்புமனுவை அவரது சமாதியில் வைத்து வணங்கினார். 

திமுக பொருளாளர் பதவிக்கு, துரைமுருகன் வேட்புமனு

திமுக பொருளாளர் பதவிக்கு, அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் வேட்புமனுத் தாக்கல் செய்தார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.  பாரதியிடம் அவர் மனுவை அளித்தார். திமுக செயல் தலைவராக உள்ள ஸ்டாலின், கூடுதல் பொறுப்பாக பொருளாளர் பதவியை வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்