மாநிலங்களவை துணை தலைவர் பதவி - இன்று தேர்தல்

மாநிலங்களவை துணை தலைவராக இருந்த பி.ஜே.குரியன் ஓய்வு பெற்றதையடுத்து இன்று தேர்தல் நடைபெறுகிறது.

Update: 2018-08-09 02:05 GMT
* மாநிலங்களவை துணை தலைவராக இருந்த பி.ஜே.குரியன் ஓய்வு பெற்றதையடுத்து, அப்பதவி கடந்த ஜூன் மாதம் முதல் காலியாக உள்ளது. இதையொட்டி மாநிலங்களவை துணை தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

* இப்பதவிக்கு பாஜக தலைமையிலான  தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.பி.  ஹரிவன்சும், எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் எம்.பி. ஹரி பிரசாத்தும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். 

*இன்று காலை 11 மணியளவில் நடைபெறும் மாநிலங்களவை துணை தலைவர் பதவிக்கான தேர்தலில் 123 எம்பிக்களின் ஆதரவை பெறுபவர் வெற்றி பெறுவார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்  ஹரிவன்சுக்கு அதிக எம்பிக்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்