தங்க தமிழ்ச்செல்வனுக்கு அட்வகேட் ஜெனரல் நோட்டீஸ்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளிப்பது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, தங்கதமிழ் செல்வனுக்கு, அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Update: 2018-06-29 13:21 GMT
தங்க தமிழ்ச்செல்வனுக்கு அட்வகேட் ஜெனரல் நோட்டீஸ்



18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தையும், தலைமை நீதிபதியையும் விமர்சித்து கருத்து தெரிவித்ததாக தங்கத்தமிழ் செல்வனுக்கு எதிராக வழக்கறிஞர் ஸ்ரீமதி என்பவர் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனுவை தாக்கல் செய்தார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அரசு தலைமை வழக்கறிஞரின் அனுமதி தேவை என்பதால் இந்த மனுவை தலைமை நீதிபதி அமர்வு, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனுக்கு அனுப்பி வைத்தது. இதையடுத்து, தலைமை வழக்கறிஞர் தங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஏன் அனுமதி வழங்க கூடாது என்பது குறித்து 2 வாரங்களில் விளக்கம் அளிக்கும்படி, தங்க தமிழ் செல்வனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்