பிரிட்டிஷ் காலத்தில் இருந்த கருத்து சுதந்திரம் தற்போது இருக்கிறதா? - வைரமுத்து கேள்வி
பதிவு: ஜூன் 23, 2018, 04:25 PM
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 14-வது மாநில மாநாடு புதுச்சேரியில் தொடங்கியது. மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் பெருமாள் முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, கருத்துரிமை அடைக்கப்பட்டு கொண்டே இருந்தால் உலகத்தில் கண் திறக்காது என்றும் பிரிட்டிஷ் காலத்தில் பாரதிக்கு இருந்த கருத்துரிமை தற்போது தனக்கும் பெருமாள் முருகனுக்கு  இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.