த.மா.கா தலைவர் வாசன் சுற்றுப் பயணம்
பதிவு: ஜூன் 23, 2018, 03:23 PM
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன்,  சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள  நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, மாவட்டம் தோறும் கட்சியை பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் சேலம்- சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.