18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு கடந்து வந்த பாதை

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், நாளை தீர்ப்பு..

Update: 2018-06-13 15:28 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை இல்லை என கடந்த ஆண்டு செப்டம்பர் 12 ம் தேதி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர், ஆளுனருக்கு கடிதம் அளித்ததை அடுத்து, பெரும்பான்மையை நிரூபிக்க பழனிச்சாமிக்கு உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு. 


வழக்கு நீதிபதி துரைசாமி முன் விசாரணை.
டிடிவி.தினகரனுக்கு ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்புள்ளதாக தினகரன் ஆதரவாளர்கள் தரப்பில் முறையிடப்பட்டதை அடுத்து பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்த தடை விதித்து உத்தரவு 

பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்ட தடை நீடிப்பு. 18 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை.


ஆளுநர் மற்றும் சபாநாயகரின் அதிகார வரம்புக்கு உட்பட்ட விஷயம் என்பதாலும், அரசியலமைப்பு தொடர்பான விவகாரம் என்பதாலும், அதில் நீதித்துறை தீர்வு ஏற்பட வேண்டியிருப்பதாலும் அனைத்து வழக்குகளையும் தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரைத்து நீதிபதி ரவிச்சந்திரபாபு உத்தரவு


தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன் வழக்கு விசாரணை துவக்கம். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் யார், யார் என்ற விவரம் வருமாறு : 
தங்கத்தமிழ் செல்வன்,  ஆர்.முருகன், சோ.மாரியப்பன் கென்னடி, கதிர்காமு, ஜெயந்தி பத்மநாபன், பழனியப்பன், செந்தில் பாலாஜி, முத்தையா, வெற்றிவேல், பார்த்திபன், கோதண்டபாணி, ஏழுமலை, ரெங்கசாமி,தங்கதுரை, பாலசுப்பிரமணி, எஸ்.ஜி.சுப்பிரமணியன், சுந்தர்ராஜ், உமா மகேஸ்வரி 

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை தீர்ப்பு - மூத்த வழக்கறிஞர் தமிழ் மணி கருத்து 
 



18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை தீர்ப்பு - மூத்த பத்திரிக்கையாளர் ஷியாம் கருத்து  




Tags:    

மேலும் செய்திகள்