காவிரி பிரச்சினையை சகோதரத்துவத்துடன் அணுக வேண்டும் - கமல்

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று, கர்நாடக முதலமைச்சர் குமாராசாமியை சந்தித்து பேசினார்.

Update: 2018-06-04 10:54 GMT
பெங்களூரூவில் முதலமைச்சர் குமாரசாமியின் அலுவலக இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது. அதன் பிறகு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியும், கமல்ஹாசனும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, இரு மாநிலங்களிடையே சுமுகமான உறவு நிச்சயம் நீடிக்கும் என்றார். தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், கடந்த 100 ஆண்டுகளாக காவிரி பிரச்சனை நீடித்து வருவதாகவும், இதனை விரைவில் முடித்து வைக்க வேண்டும் என குமாரசாமியிடம் வலியுறுத்தியதாக கூறினார். விவசாயிகளின் தூதுவராகவே கர்நாடக வந்து பேசியதாகவும் கமல்ஹாசன் குறிப்பிட்டார்.

கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம்

* மக்களின் பிரதிநிதியாகவே இங்கு வந்தேன்.
* அரசியலை விட விவசாயிகளின் தேவைகள் முன் வைக்கப்பட்டன.
* குமாரசாமி உடனான சந்திப்பு நன்றாக அமைந்தது.
* காவிரி உள்ளிட்ட தேசத்தின் பிரச்சனைகள் குறித்து பேசினோம்.

Tags:    

மேலும் செய்திகள்