#Breaking|| "லென்ஸ் வச்சி தேடணும் போல?" - மத்திய அரசின் செயல்.. சுப்ரீம் கோர்ட் சுளீர்

Update: 2024-04-23 08:13 GMT

தவறான விளம்பரங்களை வெளியிட்டதாக, பதஞ்சலி நிறுவன இணை நிறுவனர் பாபா ராம்தேவ்-க்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

மன்னிப்பு கோரியது விளம்பரத்துக்கு இணையாக பெரிய அளவில் இருந்ததா என உச்சநீதிமன்றம் கேள்வி

மன்னிப்பு கோரிய விளம்பரம் 67 நாளேடுகளில் வெளியிடப்பட்டதாக பதஞ்சலி நிறுவனம் தரப்பில் வாதம்

பதஞ்சலி நிறுவனம் மன்னிப்பு கேட்டு வெளியிட்ட விளம்பரத்தை லென்ஸ் வைத்து தேட வேண்டியுள்ளது - நீதிபதிகள் அதிருப்தி

பொருளை விளம்பரப்படுத்துவது போல, மன்னிப்பும் மிகப்பெரிய அளவில் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் - நீதிபதிகள்

தவறான விளம்பரத்தை வெளியிட்ட பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத மத்திய அரசின் செயலுக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி

"விளம்பரத்துக்கு இணையாக மன்னிப்பும் இருக்க வேண்டும்"

Tags:    

மேலும் செய்திகள்