#Breaking|| ``இனி எல்லை தாண்டினால்.. இதான் தண்டனை'' - இலங்கை நீதிமன்றம் பகிரங்க எச்சரிக்கை

Update: 2024-02-16 07:37 GMT

ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் விடுதலை; இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு; ஒருவருக்கு ஓராண்டு சிறை தண்டனை; படகின் ஓட்டுனருக்கு ஆறு மாதம் சிறை;

இனிவரும் காலங்களில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் படகின் ஓட்டுனருக்கு ஆறு மாதம் சிறை தண்டனையை விதிக்கப்படும் இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த நான்காம் தேதி மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டைப் பெற்று சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இந்த நிலையில் காங்கேசன் கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இரண்டு விசைப்படகையும் அதில் இருந்த 23 பேரை கைது செய்து சிறையில் அடைத்தது

இந்த நிலையில் அவர்களுடைய சிறை காவல் தேதி முடிந்து இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதில் மீனவர்களை விசாரணை நடத்திய நீதிபதி 20 பேரை விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்

மேலும் விடுதலை செய்யப்பட்ட 20 மீனவர்கள் இன்னும் ஓரிரு தினங்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இரண்டாவது முறையாக ஒரு மீனவர் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் இரண்டு விசை படகின் ஒட்டுனருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு தெரிவித்துள்ளதோடு இனிவரும் காலங்களில் எல்லை தாண்டி மீன்பிடிப்பில் ஈடுபடும் படகின் ஓட்டுவதற்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி கடுமையாக எச்சரிக்கை விடுத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்