15 பேர் உயிரை பறித்த கோடை மழை.. 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

Update: 2024-05-27 02:37 GMT

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், மற்ற மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளது. மேலும் வரும் 31 தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கேரளாவில் பெய்த கனமழையால், நீரில் மூழ்கியும், மின்னல் தாக்கியும், இதுவரை 15 பேர் உயிரிநழந்துள்ளனர். 59 வீடுகள் முழுமையாகவும், 533 வீடுகள் பகுதி அளவிலும் இடிந்துள்ளன. தொடர்ந்து மழை பெய்யும் என்பதால், கட்டுப்பாட்டு அறைகள் தயார் நிலையில் இருப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்