5 உலக சாதனை புத்தகங்களில் இடம்பெற்ற தமிழக ராணுவ வீரர்.. கொண்டாடி தீர்க்கும் ஊர் மக்கள்

Update: 2024-05-25 06:28 GMT

காஷ்மீரில் நடந்த பனி மாரத்தான் போட்டியில், தேன்கனி கோட்டையை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படைவீரர் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேன்கனி கோட்டையை சேர்ந்தவர் மது. இவர் காஷ்மீர் எல்லை பாதுகாப்பு படைவீரராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில, காஷ்மீர் பாரமுல்லா பகுதியில் உலகசாதனைக்கான பனிமாரத்தான் போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மது, 10 கிலோமீட்டர் தூரத்தை, 28 நிமிடம், 8 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனைக்காக, அபிஷியல் வேர்ல்ட் ரெக்கார்ட், டபிள்யூ ஆர்சிஏ, உள்ளிட்ட 5 உலக சாதனை புத்தகளில் மது இடம்பெற்றுள்ளார். தற்போது சொந்த ஊர் வந்த மதுவுக்கு அவ்வூர் மக்கள், தங்கள் பாராட்டை தெரிவித்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்