வீடியோ விவகாரம்.. தெலுங்கானா முதல்வருக்கு பறந்த சம்மன் - டெல்லி போலீஸ் அதிரடி

Update: 2024-04-29 15:56 GMT

தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் அமித் ஷா கூறிய கருத்து தவறாக திரித்து வீடியோ வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியினர் தான் இதை எடிட் செய்து

வீடியோவை பரப்பி வருகின்றனர் என்றும், இது முற்றிலும் போலியானது என்று பாஜகவினர் கூறி வருகின்றனர். இந்த வீடியோ வன்முறையை ஏற்படுத்தும் ஆபத்தும் இருக்கிறது என்று, பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தெலுங்கானா காங்கிரஸ் ட்விட்டர் வலைத்தளங்களில் இருந்து பகிரிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ரேவந்த் ரெட்டி பயன்படுத்திய அனைத்து மின்னணு உபகரணங்களுடன் மே 1-ம் தேதி விசாரணைக்காக அழைத்துள்ளனர். தெலுங்கானாவைச் சேர்ந்த மேலும் 4 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்