துணைவேந்தர்களுக்கு பார் கவுன்சில் கடிதம் | Bar Council Of India

Update: 2024-04-18 04:47 GMT

#education #barcouncilofindia #thanthitv

துணைவேந்தர்களுக்கு பார் கவுன்சில் கடிதம் | Bar Council Of India

நாடு முழுவதும் சட்டக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், உயர்கல்வித்துறை செயலர்களுக்கு பார் கவுன்சில் ஆஃப் இந்தியா கடிதம் எழுதியுள்ளது.

Vovt

இது தொடர்பாக பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் செயலர் ஸ்ரீமன்டோசென் எழுதியுள்ள கடிதத்தில், புதிய சட்டக் கல்லூரியை தொடங்குவதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்கும் முன் முழுமையான ஆய்வை, குறிப்பாக மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். அந்த விரிவான ஆய்வில், சட்டக் கல்லூரி தொடங்கும் பகுதியில் மக்கள் தொகை, வழக்கறிஞர்களுக்கான தேவை, தொழில்வாய்ப்பு, கல்லூரியின் உள்கட்டமைப்பு, ஊழியர்களின் ஊதியம் ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். தரமற்ற சட்டக் கல்லூரிகளின் பெருக்கத்தை கட்டப்படுத்தவும், சட்டக் கல்வியின் தரத்தை பேணவும் மாநில அரசின் உயர்கல்வித் துறையும், பல்கலைக்கழக துணைவேந்தர்களும் பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவுடன் கைகோர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்