திவாலாகும் அனில் அம்பானியின் நிறுவனம்

திவால் நிலையில் உள்ள நிதி நிறுவனமான ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Update: 2021-11-30 11:12 GMT
திவால் நிலையில் உள்ள நிதி நிறுவனமான ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 

81 ஆயிரத்து116 கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கி, திவால் நிலையில் தள்ளாடி வரும் ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவை ரிசர்வ் வங்கி கலைத்து விட்டு, ஒரு புதிய நிர்வாகியை நியமித்துள்ளது. ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் சேர்மன் பதவியில் இருந்து அனில் அம்பானியை நீக்கியுள்ளது. ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் நிர்வாகியாக, பேங்க் ஆப் மகாராஸ்ட்ராவின் முன்னாள் நிர்வாக இயக்குனர் நாகேஸ்வர் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனம், திவால் சட்டத்தின் கீழ், திவால் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலங்களில் திவால் சட்டத்தின் கீழ் கையகப்படுத்துப்பட்டுள்ள மூன்றாவது
தனியார் நிதி நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.  திவான் ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனம் சமீபத்தில் கையகப்படுத்தப்பட்டு, விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்