காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டம் - அனுமதி வழங்கக்கூடாது என மத்திய அரசுக்கு கர்நாடக முதலமைச்சர் கோரிக்கை

காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என மத்திய அரசுக்கு கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வலியுறுத்தியுள்ளார்.

Update: 2021-11-15 06:08 GMT
காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு  அனுமதி வழங்கக் கூடாது என மத்திய அரசுக்கு கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வலியுறுத்தியுள்ளார். திருப்பதியில் 29வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, சட்டவிரோதமான நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என கூறினார். காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், காவிரி நதிநீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் பிற மாநிலங்களுக்கு தண்ணீர் வழங்குவது குறித்து தமிழக அரசு கருத்தில் கொள்ளவில்லை எனவும் குற்றம்சாட்டினார். மேலும், இது போன்ற மாநில நலன்களை பாதிக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 
Tags:    

மேலும் செய்திகள்