டிராக்டர் பேரணி நடத்தி கைதான 83 விவசாயிகளுக்கு தலா ரூ.2 லட்சம் - மாநில அரசு ஆதரவளிக்கும் என ட்வீட்

மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தி கைதான 83 விவசாயிகளுக்கு தலா 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று பஞ்சாப் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Update: 2021-11-13 06:59 GMT
கடந்த ஜனவரி 26ம் தேதி டெல்லியில் குடியரசு தின விழா நடைபெற்ற போது, தடையை மீறி டிராக்டரில் சென்ற பஞ்சாப் மற்றும் அரியானா மாநில விவசாயிகள் செங்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது ஏற்பட்ட கலவரத்தில் 83 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என டிவிட்டரில் அறிவித்துள்ள பஞ்சாப் மாநில முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, விவசாயிகளின் போராட்டத்திற்கு பஞ்சாப் மாநில அரசு ஆதரவு அளிக்கும் என குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்