"ஷாருக் கான் பாஜகவில் இணைந்தால் போதும்" - மகாராஷ்டிர அமைச்சர் விமர்சனம்

இந்தி நடிகர் ஷாருக் கான் பாஜகவில் இணைந்தால், போதைப் பொருள் கூட சர்க்கரைத் தூளாக மாறிவிடும் என்று மகாராஷ்டிர அமைச்சர் சகன் புஜ்பால் விமர்சித்து உள்ளார்.

Update: 2021-10-24 11:41 GMT
இந்தி நடிகர் ஷாருக் கான் பாஜகவில் இணைந்தால், போதைப் பொருள் கூட சர்க்கரைத் தூளாக மாறிவிடும் என்று மகாராஷ்டிர அமைச்சர் சகன் புஜ்பால் விமர்சித்து உள்ளார். போதைப் பொருள் பயன்படுத்தியதாக ஷாருக் கானின் மகன், ஆர்யன் கான் மும்பை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சகன் புஜ்பால், குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில், பெரிய அளவில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது என்றும், அந்த வழக்கை விசாரிப்பதற்கு பதிலாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஷாருக் கானை வேட்டையாடுகிறது என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்