காவி கொடியை அகற்றி புத்த கொடி : "புத்த திருவிழாவின் போது கலவரம் " - கற்களை வீசி இருதரப்பினர் மோதல்

உத்தர பிரதேச மாநிலம் ஃபருகாபாத்தில் புத்த திருவிழாவின் போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.;

Update: 2021-10-21 10:15 GMT
உத்தர பிரதேச மாநிலம் ஃபருகாபாத்தில் புத்த திருவிழாவின் போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. புத்த மகோத்சவத்தை முன்னிட்டு, அங்கு வழிபாடு நடத்த மக்கள் ஒன்று திரண்டிருந்தனர். அப்போது கோயிலின் கோபுர உச்சியில் கட்டப்பட்டிருந்த காவி கொடியை அகற்றி, புத்த கொடியை ஒரு தரப்பினர் ஏற்றியதால் இருதரப்பு மக்களிடையே கலவரம் வெடித்தது. அப்போது ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கி கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்