"பாபர் மசூதி போல், கதக் ஜூம்மாவை தகர்க்க வேண்டும்" - ஸ்ரீராம்சேனா அமைப்பின் தலைவர் சர்ச்சை பேச்சு

பாபர் மசூதி போல், கதக்கில் உள்ள ஜும்மா மசூதியை இடித்து கோயில் கட்டவேண்டும் என ஸ்ரீராம்சேனா அமைப்பு தலைவர் பிரமோத் முத்தாலிக் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-10-18 12:58 GMT
பாபர் மசூதி போல், கதக்கில் உள்ள ஜும்மா மசூதியை இடித்து கோயில் கட்டவேண்டும் என ஸ்ரீராம்சேனா அமைப்பு தலைவர் பிரமோத் முத்தாலிக் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் ஸ்ரீராம் சேனா அமைப்பின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்த அமைப்பினர், முந்தைய ஆர்.எஸ்.எஸ். போல், அரைக் கால் சட்டை, தொப்பி, லத்தியுடன் பேரணி நடத்தினர். குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர், சாலையின் இருபுறமும்  நீண்ட பேரணி சென்றனர். கதக்கில் நடந்த கூட்டத்தில் பேசிய அந்த அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக், பாபர் மசூதியை இடித்தது போல், ஜூம்மா மசூதி தகர்க்க வேண்டும் என்றார். திப்புசுல்தானின் அராஜகத்தால் வெங்கடேஸ்வரா கோயில் இடிக்கப்பட்டு, அதன் மீது ஜூம்மா மசூதி கட்டப்பட்டுள்ளதாக ஆவேசமடைந்த அவர், கதக்கில் உள்ள ஜூம்மா மசூதியை இடித்து, மீண்டும் வெங்கடேஸ்வரா கோயிலை கட்ட பிரசாரம் செய்யுங்கள் என்றார். அவரது பேச்சு, அரசியல்வாதிகள், அதிகாரிகள், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை  ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்