12 முதல் 18 வயது வரை கோவாக்சின் - மத்திய மருந்து ஆணையம் பரிந்துரை

நாடு முழுதும் இரண்டு முதல் 18 வயதுடையவர்களுக்கு அவசரகால பயன்பாடாக கோவாக்சின் தடுப்பூசி செலுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்...

Update: 2021-10-14 05:54 GMT
கொரோனாவிற்கு எதிராக போரிட, நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது....

18 வயது பூர்த்தி அடைந்தவர்களில் 96 கோடிக்கும் மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது மத்திய அரசு

ஏற்கனவே 12 வயது மேற்பட்டோருக்கு ZYDUS தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வரும் சூழலில், தற்போது முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோவாக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்காக இரண்டு முதல் 18 வயதுடையவர்களுக்கு பயன்படுத்தலாம் என மத்திய மருந்து ஆணையத்தின் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

ஆனால் எதன் அடிப்படையில் பரிந்துரை வழங்கப்பட்டது என விரிவாக கூறப்படவில்லை..

தடுப்பூசி தொடர்பான முழு ஆய்வு முடிவுகள் பொது வெளியில் வெளியிடப்படவில்லை

இருப்பினும், 18 வயது மேற்பட்டோருக்கு பயன்படுத்தப்படும் தடுப்பு மருந்தின் கோட்பாடுகளை வைத்து பல்வேறு கட்டங்களாக குழந்தைகளிடம் பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது

நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகளிடம் பரிசோதனை செய்யப்பட்டதாகவும்

அதில், 18 வயது மேற்பட்டோருக்கான செலுத்திய போது கிடைத்த முடிவுகளே கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அப்படி பார்த்தால் ஜூலை மாதத்தில் வெளியான இறுதி ஆய்வு முடிவுகளின்படி கோவாக்சின் தடுப்பூசியின் செயல்திறன் 77 புள்ளி 8 சதவீதம் என கூறப்பட்டுள்ளது

எனினும் கோவாக்சின் தடுப்பூசிக்கு இதுவரை உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் வழங்கவில்லை. விரைவில் அங்கீகாரம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

இந்த சூழலில் குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில், இணைநோய் உள்ள குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது

இதற்கான பட்டியலையும் சேகரித்து வருகிறது மத்திய அரசு.

Tags:    

மேலும் செய்திகள்