"பாஸ்பரஸ், பொட்டாசியம் உர மானியம்" - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பாஸ்பரஸ், பொட்டாசியம் உரங்களுக்கான மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Update: 2021-10-13 03:52 GMT
மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அப்போது  நடப்பு ஆண்டில் ஆக்டோபர் முதல் மார்ச் 2022 வரை பாஸ்பரஸ்,பொட்டாசியம் உள்ளிட்ட உரங்களுக்கான உர மானியத்தை நிர்ணயம் செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி 1 கிலோ நைட்ரஜனுக்காக 18 கிலோ 78 காசுகளும், ஒரே கிலை பாஸ்பரசுக்கு 45 ரூபாய் 32 காசுகளும் பொட்டாசியத்திற்கு 10 ரூபாய் 11 காசுகளும் மானியம் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. டி.ஏ.பி உரத்திற்கான கூடுதல் மானியமாக ஒருமுறை சிறப்பு தொகுப்பாக ரூ.5 ஆயிரத்து716 கோடி செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 2021-22 ம் ரபி பருவ காலத்தில் விவசாயிகளுக்கு பாஸ்பரஸ் மற்றும் பொட்டாஸியம் உரம் தங்கு தடையின்றி மானிய மற்றும் குறைந்த விலையில் கிடைப்பதை  உறுதி செய்யும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்