சமையல் எண்ணெய் இறக்குமதி வரி குறைப்பு

சமையல் எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த, அவற்றின் மீதான இறக்குமதி வரிகளை மத்திய அரசு குறைத்துள்ளது.

Update: 2021-09-11 11:33 GMT
சமையல் எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த, அவற்றின் மீதான இறக்குமதி வரிகளை மத்திய அரசு குறைத்துள்ளது. இந்தியாவின் சமையல் எண்ணெய் தேவையில் மூன்றில் இரண்டு பங்கு, இறக்குமதி மூலம் ஈடுசெய்யப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டில் சமையல் எண்ணைய் விலை 52 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட தகவல்கள் கூறுகிறது.

விலை உயர்வைக் கட்டுப்படுத்த, பாமாயில், சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீதான அடிப்படை இறக்குமதி வரிகளை மத்திய அரசு குறைத்துள்ளது. கச்சா பாமாயில் மீதான அடிப்படை இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாகவும், கச்சா சோயா எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய்கள் மீதான அடிப்படை இறக்குமதி வரி 7.5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், சோயா எண்ணேய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்கள் மீதான மொத்த இறக்குமதி வரி 35.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் இருந்து பாமாயில் பெரிய அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. சோயா எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணேய்கள் அர்ஜென்டினா, பிரேசில், உக்ரேன் மற்றும் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. சமையல் எண்ணெய்கள் மீதான இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டுள்ளதால்,  இவற்றின் விலைகள் விரைவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்