கேரள தங்க கடத்தல் விவகாரம் - 166 கிலோ தங்கம் கடத்தியது அம்பலம்

கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் 166 கிலோ தங்கம் கடத்தப்பட்டதாகவும், அதற்காக டெலிகிராம் செயலியில் குழு அமைத்து தகவல்களை பரிமாறியதும் தெரியவந்துள்ளது.

Update: 2021-06-22 10:57 GMT
கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் 166 கிலோ தங்கம் கடத்தப்பட்டதாகவும், அதற்காக டெலிகிராம் செயலியில் குழு அமைத்து தகவல்களை பரிமாறியதும் தெரியவந்துள்ளது. 

கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளின் கூட்டுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை சுங்கத்துறை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கைதான ஷரித், சந்தீப், ரெமீஸ் ஆகியோர் டெலிகிராம் செயலியில் சிபிஎம் கமிட்டி என்ற பெயரில் குழுவை அமைத்துக் கொண்டு தங்க கடத்தல் தொடர்பான விபரங்களை பரிமாறிக் கொண்டதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது. ஒவ்வொரு முறை தங்க கடத்தலின் போதும் அதை எப்படி நிறைவேற்றுவது என டெலிகிராம் செயலியில் பகிர்ந்து கொண்டதாகவும், 166 கிலோ தங்கத்தை கடத்த தூதரக அதிகாரிகள் துணையாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் எல்லாம் விசாரணையின் போது தெரியவந்ததாக சுங்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்