மனித கழிவை அகற்றும் தொழிலாளர்கள்; அடையாள அட்டை வழங்கக்கோரிய வழக்கு - அடுத்த மாதம் 7-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவு

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, கைகளால் மனிதகழிவுகளை அகற்றும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்ககோரிய வழக்கில், அடுத்த மாதம் 7-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-06-05 11:26 GMT
இது தொடர்பாக வழக்கறிஞர் சகாய பிலோமின் ராஜ்,  தாக்கல் செய்த மனுவில்,கைகளால் மலம் அள்ளுபவர்களுக்கு வீடு கட்டுவதற்கு இடம், நிதி உதவி, குழந்தைகளுக்கு கல்வி, குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என, 2014-ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறியுள்ளார்.
இந்த வசதிகளை பெற அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மதுரை, விருதுநகர் மாவட்டத்தில் 169 பேர் மனிதகழிவுகளை அகற்றும் பணியை செய்து வருவதாகவும், 
அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி நிவாரண உதவிகள் வழங்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. 
அப்போது, இது குறித்து ஜூலை 7-க்குள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய செயலர், மதுரை, விருதுநகர் ஆட்சியர்கள், பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்
Tags:    

மேலும் செய்திகள்