முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா: "மன்மோகன் சிங் விரைவில் நலம் பெற வேண்டும்" - பிரதமர் மோடி

மன்மோகன் சிங் விரைவில் நலம் பெற வேண்டி, பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Update: 2021-04-20 03:12 GMT
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மன்மோகன் சிங் விரைவில் நலம் பெற வேண்டி, பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதேபோல திமுக தலைவர் ஸ்டாலினும், மன்மோகன் சிங் விரைவாக கொரோனாவில் இருந்து நலம் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்