கண்ணகி கோவில் விழா தடை - கேரள அரசுக்கு நோட்டீஸ்

கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடத்த தடை விதித்தது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கேரள அரசுக்கு, அம்மாநில உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Update: 2021-04-18 03:25 GMT
கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடத்த தடை விதித்தது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கேரள அரசுக்கு, அம்மாநில உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழக கேரள எல்லைப்பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டாத கூறப்படும் மங்கலதேவி கண்ணகி கோவில் உள்ளது.ஆண்டுதோறும் இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி தினத்தன்று சித்திரை முழு நிலவு விழா நடைபெறுவது வழக்கம்.
 
கொரோனா பரவலால், இந்த ஆண்டு, கண்ணகி கோவிலில் விழா நடத்துவதற்கு தமிழக-கேரள அரசுகள் தடை விதித்து உள்ளன. இந்நிலையில், இதை எதிர்த்து தேனி மாவட்டத்தை சேர்ந்த கண்ணகி அறக்கட்டளை சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்திருக்கும் பகுதியில்தான், கண்ணகி கோவில் இருப்பதாகவும், சபரிமலை ஐயப்பன் கோவிலில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது. 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதுபோல், கண்ணகி கோவில் விழாவுக்கும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், இது குறித்து விளக்கம் அளிக்குமாறு கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்