"ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்கிறது" - பிரதமர் மோடி

இந்தியா தற்சார்பு பாரத பாதையில் நடை போடுவதில் திறன்மிக்க இளைஞர்களின் பங்கு அதிகரித்து வருவதாக பிரதமர் மோடி கூறினார்.

Update: 2021-04-14 10:18 GMT
இந்தியா தற்சார்பு பாரத பாதையில் நடை போடுவதில் திறன்மிக்க இளைஞர்களின் பங்கு அதிகரித்து வருவதாக பிரதமர் மோடி கூறினார். இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் 95-வது ஆண்டு கூட்டம் மற்றும் துணைவேந்தர்களின் தேசியக் கருத்தரங்கில் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது உலகிலேயே ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்வதாகவும், ஜனநாயகம் நமது நாகரிகத்தின் ஒரு அங்கமாக திகழ்வதாகவும் கூறினார். சுதந்திரத்திற்கு பின்னரும் ஜனநாயக பாரம்பரியத்தை வலுப்படுத்தி முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல டாக்டர் அம்பேத்கர் வலுவான அடித்தளத்தை கொடுத்துள்ளதாக பிரதமர் மோடி கூறினார். 

சவாலான போராட்டத்திற்கு இடையிலும் டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கையில் அடைந்த துயரங்கள் நம் அனைவருக்கும் முன்மாதிரியாக இருப்பதாக பிரதமர் மோடி  குறிப்பிட்டார். அம்பேத்கர் காட்டிய பாதையில் தேசம் நடைபோடுவதை உறுதி செய்ய வேண்டியது நமது கல்வி அமைப்பின் தலையாய கடமை என்றும் சர்வதேச அளவீடுகளுக்கு ஏற்றவாறு நமது புதிய கல்விக் கொள்கை அமைந்திருக்கிறது என்றும் கூறினார். 

மேலும், மாணவர்களின் உள் வலிமையுடன் கல்வி வலிமையும் இணையும் போது மாணவர்களின் வளர்ச்சி பன்மடங்கு விரிவடைவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி,  இந்தியா தற்சார்பு பாரத பாதையில் நடை போடுவதில் திறன்மிக்க இளைஞர்களின் பங்கு அதிகரித்து வருவதாக கூறினார். 


Tags:    

மேலும் செய்திகள்