"லஞ்ச ஒழிப்புத்துறை சுதந்திரமாக செயல்படுகிறதா? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

தமிழக லஞ்ச ஒழிப்பு துறை அரசியல் கட்சிகளிடம் இருந்து விலகி, எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்படுகிறது? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

Update: 2021-04-08 21:05 GMT
தமிழக லஞ்ச ஒழிப்பு துறை அரசியல் கட்சிகளிடம் இருந்து விலகி, எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்படுகிறது?  என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சார் பதிவாளர் கோபாலகிருஷ்ணன் செங்கல்பட்டு மாவட்ட சார் பதிவாளராக நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது,.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஊழல் காரணமாக நில அபகரிப்புகள் நடப்பதாகவும், நீர் நிலைகள் மாயமாவதாகவும் தெரிவித்தனர்,. 

மேலும், தமிழக லஞ்ச ஒழிப்பு துறை எப்படி செயல்படுகிறது? என்றும் 

லஞ்ச ஒழிப்பு துறை அரசியல் கட்சிகளிடம் இருந்து விலகி, எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்படுகிறது? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்,. 

மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை ஊழல் வழக்குகளை லஞ்ச ஒழிப்பு துறை கையாண்டுள்ளது? என்று 
விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்