பயங்கர காட்டுத் தீ-விலங்குகள் உயிரிழப்பு - தேசிய பேரிடர் மீட்பு படையை அனுப்ப உத்தரவு

உத்தரகாண்டில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தேசிய பேரிடர் மீட்பு படையை அனுப்ப மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

Update: 2021-04-04 20:33 GMT
உத்தரகாண்டில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தேசிய பேரிடர் மீட்பு படையை அனுப்ப மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

உத்தரகாண்டில் 62 ஹெக்டேர் பரப்பளவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். 37 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் தீயில் கருகியதாகவும், வன விலங்குகளும் உயிரிழந்துள்ளதாகவும் மாநில தீயணைப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீயை கட்டுப்படுத்த 12 ஆயிரம்  வனத்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், தீயணைப்பு பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையினரை அனுப்பவும், ஹெலிகாப்டர் வழங்கவும் மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதாக உள்துறை அமைச்சர்  அமித்ஷா தெரிவித்துள்ளார்,. இதனைத்தொடர்ந்து காட்டு தீயை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் திராத் சிங் ராவத் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்,.
Tags:    

மேலும் செய்திகள்