டாலர் கடத்தல் விவகாரத்தில் அதிரடி : "கேரள முதல்வர், சபாநாயகருக்கு தொடர்பு" - ஸ்வப்னா சுரேஷ் கூறியதாக வெளியான தகவல்

கேரள தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பான டாலர் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வர் மற்றும் கேரள சபாநாயகருக்கும் தொடர்பு இருப்பதாக சுவப்னா சுரேஷ் கூறியதாக சுங்கத் துறை அதிகாரிகள் கேரள உயர்நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Update: 2021-03-06 03:00 GMT
கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் டாலர் கடத்தல் நடந்ததும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாகவும் தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சுங்கத்துறை அதிகாரிகள் கேரள உயர்நீதிமன்றத்தில் வாக்குமூலம் ஒன்றை அளித்தனர். அதில் சிறையில் உள்ள ஸ்வப்னா சுரேஷிடம் நடத்திய விசாரணையின்போது  அமீரக கவுன்சிலர் ஜெனரலுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் ஆகியோர் நெருக்கமான தொடர்பில் இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், இருவருக்கும் அரபி மொழி தெரியாது என்பதால் கவுன்சிலர் ஜெனரலுக்கும், 2 பேருக்கும் இடையே பேசுவதற்கு தன்னை பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இவர்களுடன் மேலும் மூன்று அமைச்சர்களுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருந்ததாகவும் கூறியுள்ளார். கவுன்சிலர் ஜெனரலின் உதவியுடன் முதல்வரும் சபாநாயகரும் டாலர் கடத்தியதாகவும் ஸ்வப்னா தெரிவித்துள்ளார். ஸ்வப்னா சுரேஷின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு சுங்கத்துறை அதிகாரிகள் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்