பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்... நாளை வெளியாகலாம் என தகவல்

மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நாளை வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2021-03-02 08:32 GMT
மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நாளை வெளியிடலாம்  என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு வங்கம், அசாமில் தனித்து போட்டியிடும் பாஜக, கூட்டணியாக களமிறங்கும் கேரளா, தமிழகம், புதுச்சேரியிலும் எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதையும் முடிவு செய்திருக்கிறது. இந்நிலையில், நாளை பாஜக தலைவர் ஜேபி நட்டா தலைமையில் கட்சியின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பிரதமர் மோடி, அமித்ஷா கலந்துக்கொள்ளும் இந்த கூட்டத்தின் முடிவில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்