விவசாயிகள், தவறாக வழி நடத்தப்படுகின்றனர் - மக்களவையில் பிரதமர் மோடி உரை

மக்களவையில், குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர் மோடி

Update: 2021-02-10 14:09 GMT
மக்களவையில், குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர் மோடி,இந்தியாவில் பல்வேறு சவால்களை சந்தித்து நாம் முன்னேறி கொண்டிருப்பதாக, பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.இந்தியா மிகவும் வலிமை வாய்ந்த தேசமாக இன்று திகழ்வதாகவும், இதற்கான வெற்றியை, 130 கோடி மக்களுக்கும் சமர்ப்பிப்பதாக பிரதமர் மோடி கூறினார்.வேளாண் சட்டங்கள் கருப்புச் சட்டங்கள் என்று பெரும்பாலான தலைவர்கள் கூறியதாக, பிரதமர் மோடி சுட்டிக் காட்டினார்.அதற்கு பதிலாக விவசாயிகளுக்கு உதவி புரியும் வகையில் வேளாண் சட்டத்தில் உள்ள உட்பொருள் மற்றும் எண்ணத்தை பற்றிக் கூறி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.குறைந்த பட்ச ஆதார விலை பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர்,இந்த சட்டம் இயற்றப்பட்ட பிறகும் கூட குறைந்த பட்ச ஆதார விலை அதிக அளவு உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.டெல்லி மாநில எல்லையில் அமர்ந்திருக்கும் விவசாயிகள், தவறாக வழி நடத்தப்படுவதாகவும்,இதனால் வேளாண் சட்டங்கள் குறித்து தவறாக புரிந்து கொண்டுள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்