ஏர் இந்தியா நஷ்டம் ரூ.10,000 கோடி

ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்க முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், நடப்பு நிதியாண்டில் அதன் நஷ்டம் 10,000 கோடி அளவுக்கு இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2021-02-09 03:33 GMT
ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்க முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், நடப்பு நிதியாண்டில் அதன் நஷ்டம்  10,000 கோடி அளவுக்கு இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. 2007-ல்  ஏர் இந்தியா நிறுவனத்துடன் உள்நாட்டு விமான சேவை நிறுவனமான இந்தியன்  ஏர்லைன்ஸ் நிறுவனம் இணைக்கப்பட்டது. அதன் பின்னர் ஏற்பட்ட ஆண்டு வாரியான நஷ்டத்தில் இது தான் மிக அதிகமான தொகையாக உள்ளது என கூறப்படுகிறது. இதன் விளைவாக ஏர் இந்தியாவின் மொத்த மதிப்பிற்கு பாதிப்புகள் ஏற்பட்டு, அதன் பங்கு  விற்பனை விலை குறைய வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்