"இட ஒதுக்கீட்டு முறை; உறுதி செய்க" - கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு

இந்தியாவில் உள்ள மாநில மற்றும் மத்திய கல்வி நிறுவனங்கள், சமூக ரீதியான இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என, பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2021-02-02 07:33 GMT
இந்தியாவில் உள்ள மாநில மற்றும் மத்திய கல்வி நிறுவனங்கள், சமூக ரீதியான இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என, பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு நாடு முழுவதும் அரசு கட்டுபாட்டில் இயங்கும்  மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், இட ஒதுக்கீட்டு முறையை மாணவர் சேர்க்கை ,பணியாளர் நியமணங்களில், கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டு முறையினை பின்பற்றி மாணவர் சேர்க்கை மற்றும் பணியாளர் நியமனங்களை நடத்தியதற்கான விவரங்களை பல்கலைக்கழக மானியக் குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும் யூஜிசி உத்தரவிட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளுக்கு அனுப்பவும் அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்