பேராசிரியர்களான பெற்றோர் வெறிச்செயல் - பெற்ற மகள்களை நரபலி

ஆந்திராவில் பெற்ற இரு மகள்களை, பேராசிரியர்களாக பணியாற்றும் பெற்றோரே நரபலி கொடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-01-25 05:31 GMT
ஆந்திராவில் பெற்ற இரு மகள்களை, பேராசிரியர்களாக பணியாற்றும் பெற்றோரே நரபலி கொடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆன்மீகத்தில் கொண்ட அதீத ஈடுபட்டால், மூடநம்பிக்கையில் இதுபோன்று கொடூர செயலில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த புருஷோத்தம் என்பவர் மகளிர் கல்லூரியில் துணை முதல்வராகவும், மனைவி பத்மஜா தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கால் வீட்டில் இருந்த இவர்கள், கடந்த சில மாதங்களாக வீட்டில் அற்புதங்கள்  நடத்துவதாக இருவரும் பூஜைகள் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை தனது இரண்டு மகள்களை உடற்பயிற்சி செய்யும் இரும்பு சாதனம் மூலம் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தியதில், ஆன்மீகத்தில் கொண்ட அதீத ஈடுபட்டால், மூடநம்பிக்கையில் இதுபோன்று கொடூர செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். இதில் வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து தம்பதியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்