தீபாவளிக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.150 வரை எட்டும் அபாயம்..!

வெங்காயம் உற்பத்தி அதிகம் செய்யப்படும் மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது.

Update: 2020-10-25 06:15 GMT
மகராஷ்டிராவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சாகுபடிக்கு தயாராக இருந்த வெங்காய பயிர்கள் அழுகி வருகின்றன. இதனால் வெங்காய வரத்து குறைந்ததன் காரணமாக குஜராத் மாநிலம் சூரத்தில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை கடுமையாக விலை உயர்ந்து விற்கப்படுகிறது. மேலும், தீபாவளிக்குள் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 150 ரூபாயை எட்டும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வெங்காயம் சமையலுக்கு மிகவும் முக்கியம் என்ற நிலையில், அவற்றின் விலை உயர்வு தங்களை மிகவும் பாதித்துள்ளதாக இல்லத்தரசிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்