திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ஆம் நாள் பிரம்மோற்சவம் - கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளல்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளல் நடைபெற்றது.;
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளல் நடைபெற்றது. கடந்த 19ஆம் துவங்கிய பிரம்மோற்சவம் விழாவின் ஒருபகுதியாக, தங்க கருடாழ்வாரின் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். கருட வாகனத்தில் எழுந்தருளல் மிகவும் பிரசித்திபெற்றது என்பதால், காசுமாலை உள்ளிட்ட ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு ஜொலிஜொலித்தார். ஆந்திர முதலமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்வில், தீபாராதனை காட்டப்பட்டு அனைவரும் தரிசித்தனர்.