கேரளாவில் 100 நாட்களில் 100 திட்டங்கள் :"அரசின் ஓணம் பரிசாக செயல்படுத்தப்படும்" - முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு
கேரள அரசின் ஓணம் பரிசாக அம்மாநிலத்தில் 100 நாட்களில் 100 திட்டங்கள் முடிக்கப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.;
கேரள அரசின் ஓணம் பரிசாக அம்மாநிலத்தில் 100 நாட்களில் 100 திட்டங்கள் முடிக்கப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஓணம் பண்டிகையை யொட்டி அரசின் நிவாரண கிட் அடுத்த 4 மாதங்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என்று கூறினார். சமூக நல ஓய்வூதியத்தில் மேலும் 100 ரூபாய் அதிகரிக்கப்படும் என்றும் 100 நாட்களுக்குள் 153 புதிய குடும்ப சுகாதார நிலையங்கள் நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 5 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு லேப் டாப் வழங்கும் வித்யா ஸ்ரீ திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் புதிய நிறுவனங்கள் மூலம் 50 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.