ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலையில் நடை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டது.;
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி நடையை திறந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணிக்கு அபிஷேகம், கணபதி ஹோமம் மற்றும் வழக்கமான பூஜை நடைபெற்றது. 21-ம் தேதி வரை நடை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.