பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச் சூடு - மகள்கள் கண்முன்னே நடந்த பயங்கரம்
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் மர்ம கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த பத்திரிகையாளர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;
காசியாபாத்தின் விஜய் நகர் பகுதியில், தனது மகள்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்து போது, இந்த சம்பவம் நடந்துள்ளது. விக்ரம் ஜோஷியின் வாகனத்தை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் ஒன்று, திடீரென அவர் மீது தாக்குதல் நடத்தி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் காசியாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச் சூடு - மகள்கள் கண்முன்னே நடந்த பயங்கரம்
சம்பவத்தின்போது அங்கிருந்த சி.சி.டி.வி-யில் பதிவான இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. பத்திரிகையாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம், தேசிய அளவில் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே விக்ரம் ஜோஷி மரணத்திற்கு நீதி கேட்டு பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.