இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான "ககன்யான்" விண்கலம் திட்டமிட்டபடி செயல்படுத்தப்படும்
இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான "ககன்யான்" விண்கலம் திட்டமிட்டபடி செயல்படுத்தப்படும் என்று மத்திய அணுசக்தி, விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.;
இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான "ககன்யான்" விண்கலம் திட்டமிட்டபடி செயல்படுத்தப்படும் என்று மத்திய அணுசக்தி, விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் அதன் தயாரிப்பு பணிகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். வரும் 2022ஆம் ஆண்டில் இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டுவிழாவிற்கு முன்னர், இந்தப் பணிகள் அனைத்தும் முடிவடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.