ஷார்மிக் ரயில் சேவைக்கான தேவை குறைந்தது - ரயில்வே துறை

ஷார்மிக் ரயில் சேவைக்கான தேவை குறைந்து உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-07 03:47 GMT
ஷார்மிக் ரயில் சேவைக்கான தேவை குறைந்து உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் தெரிவித்துள்ளார். இதுவரை நான்காயிரத்து 286 ரயில்கள் இயக்கப்பட்டு, 58 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாள் ஒன்றுக்கு 250 ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், அதன் தேவை தற்போது 137 ஆக குறைந்துள்ளது என்றும், கடந்த 2 நாட்களில் 56 ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு உள்ளதாகவும் ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்