குருவாயூர் கோவிலில் செவ்வாய்கிழமை முதல் நாளொன்றுக்கு 600 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி - கோவில் நிர்வாகம்

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குருவாயூர் கோயிலில் வரும் செவ்வாய் கிழமை முதல் நாளொன்றுக்கு 600 பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2020-06-07 03:35 GMT
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குருவாயூர் கோயிலில் வரும் செவ்வாய் கிழமை முதல் நாளொன்றுக்கு 600 பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேபோன்று, 60  திருமணங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும், திருமண நிகழ்ச்சிகளை பொருத்தவரை ஒரு திருமணத்திற்கு 10 நிமிடம் மட்டுமே நேரம் ஒதுக்கப்படும் எனவும்அறிவிக்கப்பட்டு உள்ளது. மணமகன், மணமகள் உட்பட 10 பேருக்கு மட்டுமே திருமணத்தில் பங்கேற்க அனுமதி என்றும், ஆன்லைன் மூலம்  முன்பதிவு செய்த  பக்தர்களுக்கு அனுமதி வழங்க அம்மாநில அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 150 பக்தர்கள் மட்டும் தரிசனம் செய்யும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்