ஐதராபாத் என்-கவுன்ட்டர் விவகாரம் : போலீஸ் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய வழக்கு - கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஐதராபாத் போலீஸ் எ​ன்-கவுன்ட்டரில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், போலீஸ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Update: 2020-02-28 10:41 GMT
ஐதராபாத் போலீஸ் எ​ன்-கவுன்ட்டரில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், போலீஸ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையத்தில் தங்கள் தரப்பு வாதங்கள் ம​ற்றும் ஆதாரங்களை வைத்து முறையிட மனுதாரர்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த என்கவுன்ட்டரில் உயிரிழந்த நான்கு பேருக்கும் இழப்பீடு வழங்குவது தொடர்பாக, ஒரு நபர் ஆணையம்  தமது அறிக்கையை தாக்கல் செய்த பின்னர், மனுதாரர்கள் அம்மாநில உயர்நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.  போலீசார் மீது வழக்கு பதிய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், இது தொடர்பாக தற்போது ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளதால், அறிக்கை வரும் வரை தலையிட மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்